About Site

தெங்கு செய்கை

தெங்கு பயிர் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் விருத்தியடைந்தது ஆகும். ஆதிகாலத்தில் இருந்தே இலங்கையில் தெங்கு செய்கை காணப்பட்டதோடு ஒல்லாந்நரின் காலத்தில் அவர்களும் தெங்கு செய்கையில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவருகிறது.



தேங்காய், புண்ணாக்கு, வெட்டுத் தேங்காய், தும்பு, கொப்பரை, கயிறு என்பன இக்காலத்தில் முக்கிய உற்பத்திகளாக காணப்பட்டன. 19ம் நூற்றாண்டின் அரை இறுதியில் அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.கோப்பி, தேயிலை பயிர்ச்செய்கை சம்பந்தமாக ஐரோப்பியர்கள் உத்வேகம் காட்டினாலும் தெங்குச்செய்கை தொடர்பாக அந்தளவு கவனத்தைச் செலுத்தவில்லை. ஐரோப்பியர்கள் தெங்குச்செய்கை மீது முதலீடு செய்வதற்கு அவ்வளவு தூரம் கவனஞ் செலுத்தாமைக்கு ஆரம்பத்திலிருந்தே தெங்குச்செய்கை சுதேசிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்தமையே காரணமாகும். தெங்குச்செய்கை சுதேசிகளின் கைகளில் இருந்தாலும் அதன் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பும் வேலைகள் முழுமையாக ஐரோப்பிய வர்த்தகத் தாபனங்களின் கைகளிலேயே காணப்பட்டன. 1910 ஆம் ஆண்டளவில் எட்டர இலட்சம ஏக்கரில் தெங்குச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
              1920 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு                    செலாவணி உழைப்பில் 27 வீதத்தை தெங்கு         உற்பத்திகளால் ஈட்டிக் கொள்ள முடிந்தது. இலங்கையின்தெங்குச்செய்கையில் கணிசமான பகுதி     உள்நாட்டு நுகர்வுக்காகப் பயன்படுத்தப்பட்டதோடு எஞ்சிய பகுதி ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும்.  









No comments:

Post a Comment